tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர்கள் திருடர்கள் போல ஓடுகிறார்கள்...

லக்னோ:
உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் சவுதாரி உதயபான், புலம்பெயர் தொழிலாளர்களை கொள்ளையர்களுடன் ஒப் பிட்டு, திமிராகப் பேசியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை பார்த்து வந்த  தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவர்களின் சொந்தமாநிலமான பீகார் சென்று கொண்டிருந்தது.உத்தரப்பிரதேச மாநிலம் ‘அவுரையா’ என்ற இடத்தில் அந்த லாரி, சாலையோரம் நின்றமற்றொரு லாரி மீது மோதியது. இதில், 25 தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர்.இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் சவுதாரி உதயபான் கருத்து தெரிவிக்கும்போது, “இந்த விபத்து வருத்தம் அளிக்கிறது. ஆனால், இதற்கு யாரும் பொறுப்பு ஏற்க முடியாது. புலம் பெயரும் தொழிலாளர்களுக்குப் பொறுமைஇல்லை. அந்த தொழிலாளர் களுக்காகப் பல இடங்களில் உணவு மற்றும் இருப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கே தங்கி இருக்க அவர்கள் தயாராக இல்லை. திருடர்கள், கொள்ளையர்கள் போல் ஓடுகிறார்கள்’’ என்று மிகவும் இழிவாகப் பேசியுள்ளார்.
அவரின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில்,  “ஏதோ வேகத்தில் வார்த்தைதவறி விட்டேன்’’ என்று சவுதாரி தற்போது பின்வாங்கியுள்ளார்.

;